நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் ஒரு தலையாக காதலித்த பெண் அஞ்சு அரவிந்த். நந்தினி கேரக்டரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவர்.
அண்மையில் அளித்த பேட்டியில், தனது முதல் திருமணம் விவாகரத்துடன் முடிந்தது என்றும், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு கணவர் உயிரிழந்ததால் கடுமையான மன அழுத்தத்தைக் கையாள வேண்டியதாக இருந்தது எனத் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இவ்வளவு சோதனைகளுக்குப் பிறகு, அவரது வாழ்க்கையில் ’96’ திரைப்படத்தைக் போல் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
அஞ்சுவும் சஞ்சயும் முதன்முதலில் பள்ளி நாட்களில் நடன வகுப்புகளின் போது காதலித்தனர். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர்களின் காதல் கதை மீண்டும் தொடர்ந்தது. பெங்களூரில் நடன ஆசிரியராக விரும்பிய அஞ்சுவுக்கு முழு ஆதரவையும் சஞ்சய் அளித்துள்ளார். அவருடைய நடனப் பள்ளிக்கு “அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ்” என்று பெயரிட்டதும் அவரே.
இப்போது இருவரும் சேர்ந்து பள்ளியை நடத்தி வருகின்றனர். அஞ்சு அரவிந்த் தன்னுடைய பள்ளி கால காதலருடன் 5 ஆண்டுகளாக பெங்களூருவில் ஒன்றாக வசித்து வருகிறார். அஞ்சுவின் மகள் அன்விகா தற்போது இடைநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை சந்தித்தாலும், அஞ்சு தனது சினிமா வாழ்க்கையில் முடங்கிவிடவில்லை. அவர் இன்றும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
Read more: 2030ல் உலகத்தை கலங்கவைக்கும் புதிய வைரஸ்.. ஜப்பானிய பாபா வாங்காவின் பகீர் கணிப்பு..!!