திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஹன்சிகா தற்போது அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
பாலிவுட் நடிகையான ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில், ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தனது தொழில் பார்ட்னரும் தனது தோழியின் முன்னாள் கணவருமான சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் வெகு விமரிசையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
இருப்பினும் சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, ஹன்சிகாவின் கணவர் சோஹைல், இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசியபோது, “விவாகரத்து என்பது முற்றிலும் பொய்யான வதந்தி” எனக் கூறி, வதந்திகளை கடுமையாக மறுத்துள்ளார்.
இந்த நிலையில் ஹன்சிகா கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது அவரது அம்மா உடன் தான் வசித்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதூரியா 10 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான இரண்டே ஆண்டில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: 20 ஆண்டுகளாக கோமா.. சவுதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்..!!