மும்பையில் நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய அழகிய வீடு!

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற தனது சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே அந்த வீட்டை தனது ரசனைக்கேற்றவாரு மாற்றியமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ’ என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் ‘சர்க்கஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார்.

pooja 5

சொந்தவீடுதான் சொர்க்கம்: மும்பையில் சொந்த வீடு வாங்கியது குறித்து ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சிறுவயது முதலே சொந்த வீடு வாங்க தனக்கு கனவு இருந்ததாகவும், கடந்த ஆண்டுதான் அந்த கனவு நிறைவேறியதாக தெரிவித்துள்ளார். மும்பையில் புதுவீடு வாங்கி அதை தனக்கு ஏற்றபடி தற்போது மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ள பூஜா, சினிமா ஷூட்டிங் என தொழில் ரீதியாக நாம் எவ்வளவு மன உளைச்சலோடு இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் அது எல்லாம் பறந்து போகும் அளவிற்கு தன் வீட்டை அழகாக அமைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பெட்ரூமில் மினி தியேட்டர் : வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனக்குப் பிடித்த மாதிரி டிசைன் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, படுக்கை அறையில் சினிமாக்களை பார்ப்பதற்கு என்று ஒரு பெரிய ஸ்கிரீனை அமைத்துள்ளதாகவும், சமைக்கும் இடம், வரவேற்பரை போன்றவற்றையும் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

KOKILA

Next Post

டிஎன்பிஎஸ்சி காலியிடங்கள்..!! எண்ணிக்கை உயர்வு..!! தேர்வர்கள் மகிழ்ச்சி..!! வெளியான முக்கிய தகவல்..!!

Tue Dec 27 , 2022
அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் காலியிடங்கள் மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைகளின் பணியிடங்களை நிரப்பி வருகின்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில், 1,754 பணியிடங்களை நிரப்புவதற்க்கான தகவல் மட்டும் இடம் பெற்று இருந்தன. மேலும், குரூப் 1 மற்றும் குரூப் […]
tnpsc

You May Like