தமிழகமே…! இன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்..! அரசு அசத்தல் அறிவிப்பு…!

Registration Department

சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு.


இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான இன்று மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது..

Vignesh

Next Post

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 26 பேர் பலி!. ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்!. ஆப்கானிஸ்தானில் சோகம்!

Thu Aug 28 , 2025
ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், […]
afghanistan accident 11zon

You May Like