Tn Govt: தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்…!

patta 2025

சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு.


மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால்தலை வெளியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன்...!

Mon Dec 15 , 2025
குடியரசுத் துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் (சுவரன் மாறன்) நினைவு தபால்தலையை டெல்லியில் குடியரசுத் துணைத்தலைவர் இல்லத்தில் நேற்று (14.12.2025) வெளியிட்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். காசி தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகளையும், இதுவரை உரிய […]
cpr 2025

You May Like