தமிழகமே…! இன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!

patta 2025

மங்களகரமான தினமான இன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.


சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் மங்களகரமான நாட்களான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.

அதன் அடிப்படையில், இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

1600 ஆண்டுகள் பழமையான புதையல்!. மாயன் மன்னரின் அறியப்படாத பொக்கிஷங்கள் நிறைந்த கல்லறை கண்டுபிடிப்பு!.

Wed Jul 16 , 2025
தென் அமெரிக்க நாடான பெலிஸில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கி.பி 350 இல் கராகோலின் முதல் அறியப்பட்ட ஆட்சியாளரான தே காப் சாக்கின் கல்லறையை கானாவில் கண்டுபிடித்தனர். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய நகரத்திற்கு அடித்தளமிட்ட கராகோல் என்ற பண்டைய மாயன் நகரத்தில் முதல் ஆட்சியாளரின் அற்புதமான கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஆட்சியாளரின் பெயர் தே காப் சாக். பல தசாப்தங்களில் மிக முக்கியமான ஒன்றாகப் […]
Ancient Mayan King 11zon

You May Like