“புலிக்கு வாலா இருக்கலாம்.. எலிக்கு தலையா இருக்கக் கூடாது..” செங்கோட்டையன் குறித்து ஜெயகுமார் விமர்சனம்..!

sengottaiyan vijay jayakumar

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..


இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அண்ணன் செங்கோட்டையன் நான் பெரிதும் மதிக்ககூடியவர். அவர் தவெகவில் சேர்ந்திருக்கிறார்.. எங்கிருந்தாலும் வாழ்க என்று தான் நான் சொல்ல முடியும்.. செங்கோட்டையனை தொடர்ந்து ஜெயகுமாரும் தவெகவில் இணையப் போகிறார் என்று யூ டியூப் சேனல்களில் சிலர் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.. செங்கோட்டையனை பொறுத்த வரை ஒரே கட்சி தான்.. எனது இறுதிக்காலம் வரை.. செத்தாலும் அதிமுக கொடி உடன் தான் நான் போவேன்..

யார் வீட்டு முன்பும் போய் காத்திருப்பவன் இந்த ஜெயகுமார் கிடையாது.. எனது பெயரை பயன்படுத்தினால் யூடியில் சிலருக்கு வருமானம் வருகிறது.. ஆனால் அவர்கள் கூறுவது நடக்காத விஷயம். புலிக்கு வாலாக இருக்கலாம்.. புலி என்பது அதிமுக.. ஆனால் எலிக்கு தலையாக இருக்கக் கூடாது.. எலி என்பது எந்தெந்த கட்சிகள் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.. புலிக்கு வாலாக இருப்பதை தான் நான் பெருமையாக கருதுகிறேன்.. எலிக்கு தலையாக இருப்பதில் எந்த பிரோயஜமும் இல்லை.. யூ டியுபை பொறுத்தவரைக்கும் ஜெயகுமார் தவெகவில் இணைகிறார், திமுகவில் இணைகிறார் என்று போடுகின்றனர்.. அது ஒருபோதும் நடக்காது..” என்று தெரிவித்தார்..

Read More : Breaking : ரெட் அலர்ட்.. நாளை இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

RUPA

Next Post

மது, சிகரெட்டுகளை விட ஆபத்தானது.. மக்களின் உயிரைப் பறிக்கும் சைலன்ட் கில்லர் இதுதான்!

Fri Nov 28 , 2025
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் முதலில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை நிச்சயமாக ஆபத்தானவை. ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் நம் வாழ்க்கையை வேகமாகவும் அமைதியாகவும் அச்சுறுத்தும் மற்றொரு எதிரி உள்ளது.. அது என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக அதிர்ச்சியடைவீர்கள். மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சுகாதார கல்வியாளருமான டாக்டர் மனன் வோரா, நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் […]
depression

You May Like