தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும், குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் 2025-ல் புதுச்சேரி பட்ஜெட்டில் இந்தத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது.. மேலும் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இது பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகள், விதவைகள், மற்றும் ஒற்றைப் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்றத்தில் இந்தத் திட்டத்தை அறிவித்தார், மேலும் இதை அனைவருக்கும் விரிவுபடுத்துவதாகவும் உறுதியளித்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையானது வரும் 12-ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ரூ.2500 ஆக வழங்கப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத் தொகை உயரும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஜாய் கிரிசல்டா தொடர்பான வழக்கு.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!



