கோடை காலம் என்பது மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் வரையில் காணப்படும். இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருக்கும் வழக்கமாக மே மாதம் 3 அல்லது 4ம் தேதிகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கி 27 நாட்கள் நீடிப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டில் மே மாதம் நான்காம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி முதல் 108 பாரன்ஹீட் வரையில் காணப்பட்டது.
அதன் அடிபடையில், வேலூர் பகுதியில் மே மாதம் 16ஆம் தேதி 107 டிகிரி, சென்னையில்,மே 17ல் 108 டிகிரி, மே 18 இல் 108 டிகிரி பாரான்ஹீட் என்று வெயிலின் தாக்கம் காணப்பட்டது. தமிழகம் புதுவை உள்ளிட்ட 14 இடங்களில் நேற்று வெப்ப அளவு 100 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தது.
கத்தரி வெயிலையும் முன்னிட்டு பல நகரங்களில் நேற்று உச்சபட்ச வெப்பம் பதிவாகி இருந்தது. சென்னை மீனம்பாக்கம், 106.88 திருத்தணி 106.7, வேலூர், 15.8 சென்னை நுங்கம்பாக்கம் 104. 54, மதுரை விமான நிலையம் 103.64, மதுரை நகரம் 103.28 பாளையங்கோட்டை 103.1, புதுவை 102.94, நாகை 102.74, பரங்கிப்பேட்டை101.66, கடலூர் 101.48, பரமத்தி வேலூர் 101.3, திருச்சி 100.58, ஈரோடு,தஞ்சை,காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 100.4 என வெப்பத்தின் அளவு பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல மேற்கு திசை காற்று வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் புதன்கிழமை வரையில் 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.