இந்திய ராணுவத்தில் சேர அக்னிவீர் வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தகுதிதான்! விண்ணப்பிப்பது எப்படி?

Agni Veer 1

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் ‘அக்னிவீர்’ என அழைக்கப்படுவார்கள். இவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளில் 4 ஆண்டுகள் சேவை புரிவார்கள். 2026–27 ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஏப்ரல் 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி விவரங்கள்:

* 01.07.2005 முதல் 01.07.2009 வரை பிறந்திருக்க வேண்டும்

* 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி

* உடல் தகுதி, தோ்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இளைஞர்களை தயார் செய்ய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், அனைத்து வட்டங்களிலும் ‘வெற்றி நடை’ இலவச பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தோ்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. எழுத்து தோ்வை தமிழிலும் எழுதலாம். மேலும், விவரங்களுக்கு 9952594351 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய ராணுவத்தில் சேர முன்வருமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Read more: இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய நபர் கைது.. காவல்துறை அதிரடி..!

English Summary

Agniveer recruitment to join the Indian Army.. 10th class is the only qualification! How to apply?

Next Post

நாளை தான் கடைசி நாள்..! இந்த பணிகளை முடித்துவிடுங்கள்..! இல்லயெனில் அபராதம்..!

Mon Mar 30 , 2026
2025-26 நிதியாண்டின் இறுதி நெருங்கிவிட்டது. வரி செலுத்துவோர் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு மார்ச் 31 ஒரு மிக முக்கியமான காலக்கெடுவாகும். இந்தக் காலத்திற்குள் நீங்கள் சில முக்கியப் பணிகளை நிறைவு செய்யாவிட்டால், நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கலாம் அல்லது அபராதங்களைச் சந்திக்க நேரிடலாம். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.. வரி சேமிப்பு முதலீடுகள்: பழைய வரி முறையைத் (Old Tax Regime) […]
advance tax1 1

You May Like