அட இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!… மல்லிகைப்பூவின் மருத்துவ குணங்கள் ஏராளம்! இப்படி ட்ரை பண்ணுங்க!

மணக்கும் மல்லிகைப் பூவின் பயன்கள் என்ன? அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மல்லிகை பூக்கள் மத மற்றும் திருமண விழாக்களின் ஒரு பகுதியாகும். அதை தலையில் சூடிக்கொள்ளவும், தெய்வ வழிபாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.மல்லிகை பூவை கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர சிறுநீரகப் பிரச்னை, வயிற்று கோளாறுகளை சரிசெய்ய உதவும்.

மல்லிகைப் பூவை நிழலில் காய வைத்து அதை பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரையும். அதோடு நீர் சுருக்கு, சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தாலும் குணமாகும்.நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மல்லிகைப் பூவை காய வைத்து பொடியாக்கி தேனில் குழைத்து இரு ஸ்பூன் சாப்பிட குணமாகும்.உடலுறவுக்கும் மல்லிகை எண்ணெய் உதவுமாம். அதாவது இது உணர்ச்சியை தூண்டுவதில் மல்லிகைக்கு நிகர் எதிவும் இருக்க முடியாது. அதனால்தான் பெண்கள் தலையில் மல்லிகை பூ வைத்தாலே ஆண்களை ஈர்க்கிறது.

மல்லிகை எண்ணெய்யின் மணம் மன அழுத்தத்தை குறைக்க உதவுமாம். ஆழ்ந்த தூக்கத்தையும் வரவழைக்கும். எனவே தூங்கும் முன் கொஞ்சம் கைகளிலோ அல்லது மல்லிகை எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து அந்த வாசனையை வீடு முழுவதும் பரப்பினால் நன்மைகள் கிடைக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மல்லிகைப் பூவை அரைத்து அதை மார்பகங்களில் பத்து போட்டால் உடனே பால் கரைந்து வெளியேறிவிடும்.மல்லிகை எண்ணெய்யை வாங்கி தழும்புகள், புண், அரிப்பு , சரும அலர்ஜிக்கு தடவினால் குணமாகும்.மல்லிகைப் பூக்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, சளி, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல், போன்ற பிரச்னைகளும் வராதாம்.

Kokila

Next Post

மெகா அறிவிப்பு...! அரசு போக்குவரத்து கழகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்...!

Thu Feb 16 , 2023
அரசு போக்குவரத்து கழகத்திற்கு, 807 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 800 நடத்துனர் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் பணியிடங்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், 203 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிரப்புவது தொடர்பாக, போக்குவரத்து துறை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. […]

You May Like