ஐடி துறைக்கு ஆப்பு வைக்கும் AI.. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழப்பு..!! என்ன நடக்குது..?

ai jobs

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள், மனிதவள மற்றும் கிரியேட்டிவ் துறைகள் அதிகம் பாதிப்பு. IBM, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான பணிநீக்கங்கள் செய்துள்ளன.


2025ஆம் ஆண்டு தொழில்நுட்ப உலகத்திற்கு பெரும் சோதனைக் காலமாகவே அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை Futurism என்ற பிரபல தொழில்நுட்ப ஊடகம் வெளியிட்டுள்ளது.

நிரந்தரமான தொழில்களாகக் கருதப்பட்ட மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேலாண்மை (Human Resources) மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் (Creative Sectors) வேலைவாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னணி நிறுவனங்களான IBM மற்றும் Microsoft, தங்களது பல்வேறு பரிவர்த்தனைகளிலும், வேலைகளில் ஏஐ மென்பொருள்களை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், ஏற்கனவே இருந்த பணி தேவை குறைந்து, ஏராளமான பணியாளர்கள் பணி இழக்க நேரிட்டுள்ளது.

IBM நிறுவனத்தின்படி: 2025ம் ஆண்டின் ஆரம்பத்தில் 200 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மனிதவள துறையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி இழந்தனர்.ஏஐ பயன்படுத்தி, மின்னஞ்சல் அனுப்புதல், ஊழியர் தகவல் சேகரித்தல், சம்பள கணக்கீடு, வரி வசூல் போன்ற வேலைகள் தானாக நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மனித ஊழியர்களின் தேவை குறைந்ததால் 8,000 பேரை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

Microsoft நிறுவனத்தில் புதிய AI அமைப்புகள் மென்பொருள் எழுதும் மற்றும் சோதனை செய்பவர்களின் பணி தேவையை குறைத்துவிட்டன. இதன் விளைவாக, உலகளவில் சுமார் 6,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வாஷிங்டன் மாகாணத்தில் மட்டும் 40% பணி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த AI அமைப்புகளை உருவாக்கிய ஊழியர்களே, அதே தொழில்நுட்பத்தால் பணி இழந்துள்ளனர்.

சிறந்த திறமையுடைய நிபுணர்களை நம்பிக்கையாக பணியில் அமர்த்தியிருந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் Machine Learning, Generative AI, மற்றும் Automated Algorithms என்பவற்றை முன்னிறுத்தி வருகின்றன. இதனால் மனிதர்கள் செய்த பணிகளை இயந்திரங்கள் தானாக செய்து முடிக்கின்றன. குறைந்த ஊதியத்தில், 24/7 செயல்படும் அமைப்புகளால் நிறுவனங்களுக்கு செலவுகளை கட்டுப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இதனால் வேலைவாய்ப்புகள் குன்றியுள்ளன. “ஏஐ வளர்ச்சி = வேலை இழப்பு” என்ற நிலை உருவாகியுள்ளது.

Read more: இதுக்கு எண்டே இல்லையா..? மேலும் 7 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்..!!

Next Post

கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகை.. டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கப்படும்...! தமிழக அரசு அறிவிப்பு...!!

Tue Jul 1 , 2025
2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 297 கோடி வழங்கி அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளி வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அல்லிகளின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 […]
Tn Govt 2025

You May Like