தவெக தலைவர் விஜயுடன் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’’மக்களை சந்திப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்தவே பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளோம். அதிமுக தலைமையில்தான் தனித்த ஆட்சி அமைப்போம் என்றார். மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைப்போமா என்ற கேள்விக்கு யுகங்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த இபிஎஸ்.. தேர்தல் தொடர்பாக சில திட்டங்களை வகுப்போம். அந்த யுக்தி, வியூகங்களை எல்லாம் இப்போது வெளியே சொல்ல முடியாது என்றார். மேலும் பாஜகவையும் தமிழக வெற்றிக் கட்சி கழகத்தையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் அரசியல் களத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு பலம் உள்ளது. அதன் அடிப்படையிலேயே வாக்குகள் இடம்பெறுகின்றனர் என்று கூறினார்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இபிஎஸ் மறுக்கவில்லை. மேலும் கூட்டணியில் நாம் தமிழர் அல்லது இடதுசாரி கட்சிகளை சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதா என்று கேள்விக்கு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்பதாக கூறினார்.
Read more: பிரியாணி சாப்பிட்ட பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் இருக்கா..? அவசியம் இத படிங்க..