கூட்டணி அழைப்பு விடுத்த அதிமுக.. சஸ்பென்ஸ் வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்..!! பரபரக்கும் அரசியல் களம்..

Premalatha Eps 2025

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.


மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் மனக்கசப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேமுதிகவை பொருத்தவரை இதுவரையில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் நாங்கள் யாருடன் கூட்டணியில் இணைவோம் என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் பிரேமலதா அறிவித்தார்.

தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் LK சுதீஷின் தாயார் அம்சவேணி கடந்த வாரம் காலமானார். சுதீஷ் வீட்டிற்கு நேரில் சென்று எஸ்பிஐ வேலுமணி ஆறுதல் கூறினார்.

மேலும், பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், 20 நிமிடங்கள் தனியாக சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வலியுறுத்தியதோடு மட்டுமின்றி விரைவாக முடிவை அறிவிக்குமாறும் எஸ்பிஐ வேலுமணி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: ‘எனது நல்ல நண்பர்’: எகிப்தில் பிரதமர் மோடியை பாராட்டிய ட்ரம்ப்; பின்னால் பாகிஸ்தான் பிரதமர்!

English Summary

AIADMK calls again.. Premalatha Vijayakanth creates suspense..!!

Next Post

வெந்தயத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியம்.. இப்படி பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது!

Tue Oct 14 , 2025
இந்திய உணவு வகைகளில் வெந்தயம் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும்.. ஆனால் இந்த சிறிய விதை நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? வெந்தயத்தின் விதைகள் மற்றும் இலைகள் இரண்டும் மருத்துவ குணங்களால் நிரம்பியுள்ளன. ஆயுர்வேதத்தில், வெந்தயம் பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெந்தயம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை […]
fenugreek n

You May Like