அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் பழனிசாமி கூட்டியுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 30-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம், சென்னை நகரின் இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமைக் கழகப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் எதிர்கால திட்டங்கள், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள், மற்றும் வரவிருக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் முக்கிய சந்திப்பாக கருதப்படுகிறது.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், மீதம் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது, ஐடி விங்-ன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.