அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் தம்பிதுரை.. இவர் 1985-89 வரை நாடாளுமன்ற குழு தலைவராக செயல்பட்டார். பின்னர் 1998-1999 வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.. 2009, 2014 மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. தற்போது அவர் அதிமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக இருக்கிறார்..
இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான தம்பிதுரை உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இன்று காலை அவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.. அவரின் உடல்நிலை மற்றும் சிகிச்சை விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : வங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எப்போது புயலாக மாறும்? வானிலை மையம் முக்கிய தகவல்!



