’எடப்பாடி பழனிசாமிக்கே அதிமுக அலுவலகம்’..! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கடந்த ஜுலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள தெருவில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

’எடப்பாடி பழனிசாமிக்கே அதிமுக அலுவலகம்’..! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்.. வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..

Wed Jul 20 , 2022
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, திருச்சி, புதுக்கோட்டை […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like