ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை AAIB சமர்ப்பித்துள்ளது..
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பேரும் தரையில் இருந்த பலர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார். இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது..
இந்த நிலையில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விசாரணைக்குழு அதிகாரிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
AAIB இயக்குநர் ஜெனரல் மேற்பார்வையின் கீழ் நடந்த இந்த விசாரணைக் குழுவில் ஒரு விமான மருத்துவ நிபுணர் மற்றும் ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியும் அடங்குவர். இந்த குழு தற்போது டெல்லியில் இருப்பதாகவும், AAIB ஆய்வகத்தில் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. தொழில்நுட்ப பகுப்பாய்வை ஆதரிக்க போயிங் மற்றும் GE இன் பிரதிநிதிகளும் தலைநகரில் உள்ளனர்.
இதனிடையே விபத்துக்குள்ளான விபத்தின் கருப்பு பெட்டியில் இருந்து காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) மற்றும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) இரண்டும் மீட்கப்பட்டு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) ஆய்வகத்தில் தரவு பிரித்தெடுத்தல் தொடங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் “CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. இந்த முயற்சிகள் விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைப்பது மற்றும் விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுப்பதற்கும் பங்களிக்கும் காரணிகளை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAIB என்பது விமான விபத்து ஆய்வுகளுக்கான நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.. அகமதாபாத் விபத்து நடந்த ஒரு நாளுக்குப் பிறகு ஜூன் 13, 2025 மத்திய அரசு ஒரு உயர்மட்ட குழுவை அமைத்தது.
AAIB இன் இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவில், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) பிரதிநிதிகள், ஒரு விமான மருத்துவ நிபுணர் மற்றும் ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அதிகாரி ஆகியோர் அடங்குவர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 24 அன்று, கருப்புப் பெட்டிகள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன. இந்த கருப்பு பெட்டியின் தரவுகள் மீட்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்.. வினோத காரணம்..