டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.
விசிகவை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் பதிலுக்கு தாக்குதலில் ஈடுபட்டார். இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் விசிகவினர் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
இந்நிலையில் டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.