அஜித் பிறந்தநாளில் ரீ-ரிலீசாகும் ‘பில்லா’ திரைப்படம்..  கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள்!!

நடிகர் அஜித் நடித்து முன்பு வெளியான ‘பில்லா’ படம் மே 1 அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் ஆகிறது. விஜயின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் ‘பில்லா’ இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ‘கில்லி’ படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆனதை ஒட்டி கடந்த வாரத்தில் இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப் படங்களுக்குப் போட்டியாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரையரங்கம் கொண்டாட்ட களமாக மாறியது. படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்தது.

இதனால், விஜயை சந்தித்த படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துச் சொன்னதுடன், “வருடத்திற்கு ஒரு படம் கட்டாயம் நடிக்க வேண்டும்” என்று வேண்டுகோளும் வைத்தனர். இதனை அடுத்து, இப்போது அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இதனால், விஜயை சந்தித்த படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துச் சொன்னதுடன், “வருடத்திற்கு ஒரு படம் கட்டாயம் நடிக்க வேண்டும்” என்று வேண்டுகோளும் வைத்தனர். இதனை அடுத்து, இப்போது அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இப்போது படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ‘கில்லி’ ரீ ரிலீஸ் வசூல் சாதனையை ‘பில்லா’ முறியடிக்குமா என ரசிகர்கள் இப்போதே இணையத்தில் வாக்குவாதத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ ரீ ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Heart Attack | மாரடைப்பை தடுக்க தினமும் கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்.!!

shyamala

Next Post

ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி..! தீயை கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறை!

Thu Apr 25 , 2024
பாட்னாவில் அடுக்குமாடி ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே அடுக்குமாடிகள் அமைந்துள்ளன. அங்குள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில் தீடிரென காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை […]

You May Like