அஜித்தை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதை நேரில் பார்த்த சிறுவன் சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. மேலும் மாவட்ட நீதிபதியும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் உயிரிழந்த அஜித்தின் மாமா மகன் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அஜித்தை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். மேலும் “ அஜித்குமார் என் சொந்த அந்த அத்தை பையன்.. அஜித்தை பைப்பை வைத்து அடித்தனர்.. அப்போது அங்கு வந்த ஒருவர் அஜித்தின் கையை உடைத்தார். அஜித் தண்ணீர் கேட்டார். மிளகாய் பொடி வாங்கி வந்து வாயில், கண்ணில், ஆணுறுப்பில் கொட்டி தண்ணீர் ஊற்றினர். அதன்பின்னர் அஜித்தை மேலே பார்க்க சொல்லி, ஒருவர் செருப்பை கழற்றி முகத்தில் அடித்தனர். கழுத்தில் ஏறி மிதித்தனர். இவ்வளவு தான் நான் பார்த்தேன்.. அதன்பின்னர் என்னால் பார்க்க முடியவில்லை என்று வெளியே வந்துவிட்டேன்.. கோயில் ஆபிஸுக்கு பின்னால் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தான் இதெல்லாம் நடந்தது..” என்று தெரிவித்தார்.
அஜித்குமார் பத்ரகாளியம்மன் கோயிலில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது என்றும் அந்த சிறுவன் கூறினார். அங்கிருந்த யாரும் காவல்துறையினரை தடுக்கவில்லை என்றும், சக்திவேல் என்பவர் மட்டும் வீடியோ எடுத்ததாகவும் கூறினார். அங்கிருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் எடுத்து கொண்டு போய்விட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
Read More : அஜித் கொலை வழக்கு.. டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.. 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு..