அஜித்தின் AK 62 டைட்டில் டீசர் இந்த தேதியில் வெளியாகிறதாம்.. வெளியான செம அப்டேட்..

ஹெச். வினோத் – அஜித் கூட்டணியில் உருவான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கொடுத்த கதையில் அஜித் திருப்தி அடையவில்லை என்பதால், அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படுகிறது..


இதனைத்தொடர்ந்து, மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து லைகா நிறுவனம் எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.. இந்த படம் துணிவை விட மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக இருக்க வேண்டும் என்று அஜித், மகிழ் திருமேனியிடம் கூறி உள்ளாராம்.. எனவே மகிழ் திருமேனி மீண்டும் கதையில் ஒரு சில மாற்றங்களை செய்து வருகிறாராம்.. எனவே AK 62 படத்தின் அறிவிப்புக்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. இதனிடையே, மார்ச் முதல் வாரம் AK 62 டைட்டில் டீசருடன் படப்பிடிப்பை தொடங்க லைகா திட்டமிட்டிருந்தது. ஆனால், விக்னேஷ் சிவன் விலகல், அஜித்தின் தந்தை மறைவு ஆகிய காரணங்களால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாள் தினமான மே 1ம் தேதி AK 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. அதேபோல், அஜித்தின் மோஷன் போஸ்டரையும் அன்றைய தினம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.. ஆனால் அஜித் தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடமாட்டார் என்பதால், அவரின் பிறந்தநாளில் AK 62 அப்டேட் எப்படி வெளியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

1newsnationuser1

Next Post

சூடானில் உச்சக்கட்ட கலவரம்.. இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.. இந்தியத் தூதரகம் எச்சரிக்கை..

Sat Apr 15 , 2023
ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது சூடான் கலவர பூமியாக மாறியிருக்கிறது. சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது… இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை […]
Polish 20230415 170735362

You May Like