தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம் லாக் அப் டெத் கிடையாது. இதை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரை அருகே திருப்புவனம் பகுதியில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலியில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். திருட்டு வழக்கு தொடர்பாக இவரை விசாரிக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் அவரது வீடுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார், இவரின் தம்பியையும் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் போலீசார் விசாரணையின் போதே அடிக்க தொடங்கி இருக்கின்றனர்.
போலீசாரின் எல்லையற்ற தாக்குதலால், ஒரு கட்டத்தில் அஜித் குமார் மயக்கம் அடைந்துள்ளார். இதன்பின் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் அஜித் குமாரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் மரணம் லாக் அப் டெத் கிடையாது. இதை சாத்தான்குளம் சம்பவத்தோடு ஒப்பிட முடியாது என ரகுபது தெரிவித்துள்ளார். நாங்கள் யாரையும் காப்பாற்றவில்லை.. யாராக இருந்தாலும்.. எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது குற்றசாட்டு உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Read more: சிவகங்கை மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு.. பக்தர்கள் அதிர்ச்சி..!!