லோகேஷ் கனகராஜ் பாணியில் ’ஏகே 62’ பட டைட்டில்..!! வெளியான முக்கிய தகவல்..!!

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள ‘ஏகே 62’ படத்தின் டைட்டில் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் அஜித் நடிக்கும் ’ஏகே 62 படத்தின்’ படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததால், ஷூட்டிங் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் படக்குழு மவுனம் காத்து வருகிறது. ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியிடப்படாவிட்டாலும், அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆபிஸ் பூஜை கூட கடந்த சில தினங்களுக்கு முன் போடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தான் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 62 படத்தின் அறிவிப்பு விஜய்யின் லியோ படத்தை போன்று டைட்டிலோடு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்காக 3 டைட்டில்களை தேர்வு செய்து வைத்துள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. அதில் ஒன்று தான் இறுதி செய்யப்பட்டு வைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த டைட்டிலில் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்துக்கு டெவில் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் படத்துக்கு லியோ என ஆங்கிலத்தில் பெயரிட்டுள்ளதால், ஏகே 62 படக்குழுவும் அதே பாணியில் பெயரிட திட்டமிட்டு இந்த டைட்டிலை தேர்வு செய்துள்ளார்களாம். இப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாக வாய்ப்புள்ளதால் இந்த தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்கிற நோக்கத்தில் இப்படி ஒரு தலைப்பை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

CHELLA

Next Post

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு..!! முன்னாள் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

Fri Feb 24 , 2023
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் தனது கடைசி உரையை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆனால், பாஜக வெற்றி பெற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே ஒரே நோக்கம், அது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” […]
BS Yeddyurappa tw

You May Like