பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்கும் சென்று, வாக்காளர்களின் வீட்டுத் தரப்பில் நேரடியாக கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வழங்கி வருகின்றனர்.
இந்த முறை, படிவங்களில் மொபைல் எண்ணும் கேட்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி, சில சைபர் மோசடிகள் நடக்கத் தொடங்கியதால், தேர்தல் ஆணையம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.. SIR படிவத்தை நிரப்புவதற்கு OTP எதுவும் தேவையில்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த செயல்முறைக்காக எந்த மொபைல் ஆப் அல்லது APK கோப்பையும் உங்கள் மொபைலில் நிறுவ வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.
OTP-கள் மற்றும் APK கோப்புகளிடம் எச்சரிக்கை!
சைபர் குற்றவாளிகள் SIR படிவத்தை காரணமாகக் கொண்டு வாக்காளர்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர்கள் பயன்படுத்தும் சில பொதுவான மோசடி முறைகள் இதோ:
போலி கால் & OTP மோசடி
சைபர் கொள்ளையர்கள் தங்களை BLO-க்கள் அல்லது தேர்தல் ஆணைய ஊழியர்கள் என்று காட்டி வாக்காளர்களுக்கு அழைப்புகள் செய்கிறார்கள்.அவர்கள், “உங்கள் மொபைல் எண் / வாக்காளர் தகவல் SIR பதிவில் புதுப்பிக்கப்படவில்லை” என்று பொய் கூறுகிறார்கள். அதன்பிறகு, SIR செயல்முறையை நிறைவு செய்வதற்காக OTP தேவைப்படுகிறது என்று மக்களை நம்ப வைத்து OTP கேட்டுக்கொள்கிறார்கள். இந்த முறையில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
போலி APK கோப்பு மோசடி
சிலர் SMS அல்லது WhatsApp வழியாக SIR, Voter Helpline போன்ற பெயர்களில் போலி APK கோப்புகளுக்கான லிங்குகள் அனுப்புகிறார்கள். இந்த போலி ஆப் மொபைலில் நிறுவப்பட்ட உடனே, மோசடிகள் மொபைலை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் அனைத்து தரவையும் திருடலாம், வங்கி கணக்குகளையும் காலி செய்யலாம்.. இது மிக ஆபத்தான மோசடி.
SIR மோசடிகளிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?
OTP-ஐ ஒருபோதும் பகிர வேண்டாம்
SIR படிவம் நிரப்புவதற்கு OTP தேவையில்லை.
யாராவது SIR பெயரில் OTP கேட்டால், உடனே அழைப்பை துண்டிக்கவும்.
மீண்டும் மீண்டும் கால் / WhatsApp வந்தால், காவல்துறைக்கு புகார் செய்யவும்.
போலி ஆப்கள் மற்றும் APK-களை பதிவிறக்க வேண்டாம்
WhatsApp அல்லது SMS மூலம் வரும் SIR பெயரில் அனுப்பப்படும் எந்த லிங்க் அல்லது APK-யையும் ஒருபோதும் நிறுவ வேண்டாம்.
இந்த எச்சரிக்கைகளை பின்பற்றினால், சைபர் மோசடிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
Read More : அனைவரையும் உள்ளடக்கிய மனிதநேயத்துடன் உலகளாவிய வளர்ச்சி: ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!



