RANSOMWARE: இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரான்ஸம்வேர் தாக்குதல்கள் இணைய(CYBER) உலகத்தை அச்சுறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. டேட்டாக்களில் நடைபெறும் பெரும்பாலான தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் மனித தவறுகளே காரணம் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. 34 சதவீத நிறுவனங்களில் இணையதள தாக்குதல்கள் மற்றும் ரான்ஸம்வேர் தாக்குதல்களுக்கு மனித தவறுதான் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சைபர் கிரிமினர்களால் அதிக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளின் பட்டியலில் […]

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி மிரட்டி உள்ளனர். கலக்கமடைந்த அந்தப் […]

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 1.4 லட்சம் மொபைல் எண்கள் சமீபத்தில் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது. நிதி சேவைத் துறையில் இணைய பாதுகாப்பை குறித்து ஆலோசிக்க, நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அந்த கலந்தாய்வு கூட்டத்தில், ஏபிஐ (API) ஒருங்கிணைப்பு மூலம் சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் ஃபிராட் ரிப்போர்ட் அண்ட் மேனேஜ்மென்ட் […]

தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்து வந்தாலும் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களை தவறான வகையில் சித்தரித்து ஆபாசமான புகைப்படங்களை பதிவு செய்திருப்பதாக உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய குடும்ப பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக […]

மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவில் திறப்பிற்கான சிறப்பு பூஜைகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. மேலும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என உத்திர பிரதேச […]

ஆன்லைன் மூலமாக பண மோசடி செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களை விதவிதமாக புதுவித யோசனையுடன் மோசடிக்காரர்கள் தினம் தினம் ஏமாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு மோசடிகளை நாம் கேள்விப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் மோசடி தற்போது நடைபெற்று இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான அவிநாசி என்பவர் புனே நகரில் தனது வீட்டிலிருந்து வேலை செய்து வந்திருக்கிறார். வொர்க் ப்ரம் ஹோம் முறையில் […]

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆபாச பட காட்சிகள் ஒளிபரப்பானதால் வீடியோ கான்பரன்சிங் வழக்கு பதிவு விசாரணையை நிறுத்தி வைப்பதாக தலைமை நீதிபதி அறிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காலகட்டத்திலிருந்து உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்தி வந்தன. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஹிஜாப் தடை பிரச்சினை மற்றும் அரசியல் சாசன வழக்கு ஆகியவையும் […]

பிறமதங்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி தவறாக சித்தரித்தும் பிற மதங்களை அவமதிக்கும் வகையிலும் பேசி வீடியோ வெளியிட்டதாக முகமது சுஹைல் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய பிரிவு […]

சமூக வலைதளங்கள் மூலமாக ஒருவருடன் பழகும் போது நிச்சயம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனாலும், அதனை தற்போதைய இளைய தலைமுறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செயல்படுவதால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தன் பாலின டேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலியில் அறிமுகமான ஒரு […]

தற்போது பலர் சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படும் பழக்கத்தின் காரணமாக, அப்படி பழகியவர்களுடன் எல்லை மீறி பழகி வருவதால், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிக்ராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இருக்கின்றன. அந்த சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகின்றன. அதே நேரம், அந்த சமூக வலைதளங்களின் மூலமாக பல்வேறு தீமைகளும் ஏற்படுகிறது. அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் உப்பளம் […]