புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்..
தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..
அந்த வகையில் புதுச்சேரியில் முதலில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.. இதை தொடர்ந்து அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.. அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்..
இந்த நிலையில், புதுச்சேரியில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் விரைவில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச மனை பட்டா வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த சூழலில் தேர்தலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Read More : பிரதமர் நிகழ்ச்சியில் திருமா.. எந்த திருப்புமுனையும் இல்லை.. ராஜேந்திர பாலாஜிக்கு வன்னி அரசு பதிலடி..