தூள்..! தமிழகம் முழுவதும் 28 & 29 ஆகிய இரண்டு நாள் மட்டும்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

Tn Government registration 2025

சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு.


இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான 28.08.2025 மற்றும் 29.08.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆரோக்கிய ஆபத்து!. சாப்பிட்ட உடனே இந்த தவறுகளை செய்யாதீங்க!. உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா?

Wed Aug 27 , 2025
சாப்பிட்ட பிறகு மக்கள் தூங்கவோ அல்லது வேலை செய்ய உட்காரவோ தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம்.அப்படி சாப்பிட்ட உடனே […]
after eating 11zon

You May Like