குடும்ப அட்டை & ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும்… ரூ.60,000 வரை மானியம் பெறலாம்…! முழு விவரம்

ration 2025

சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் வணிகம். விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7 சதவிகிதமும் மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை 8 சதவிகிதமும் ஆகும். கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருபாலருக்கான உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் இக்கடனுதவி வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.120,000/-வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 7% திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சாதி வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிகள் ஆகிய ஏதேனும் ஒரு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஷாக்!. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சொட்டு நீர் கூட இருக்காதாம்!. பேரழிவை நோக்கிச் செல்லும் உலகம்!.

Tue Jul 8 , 2025
ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் காபூல், அதிகரித்து வரும் நீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலாப நோக்கற்ற நிறுவனமான மெர்சி கார்ப்ஸின் புதிய அறிக்கையின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தண்ணீர் இல்லாத முதல் நவீன நகரமாக ஆப்கானிஸ்தான் தலைநகரம் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. காபூலில் தண்ணீர் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக நகரின் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைந்து […]
water disaster 11zon

You May Like