கரடிகளை வேட்டையாட அனுமதி..!! மானியமும் இருக்காம்..!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது.

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால், இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை. அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

கருப்பு கரடிகளைத் தவிர பிற கரடிகள் ‘வனவிலங்கு மேலாண்மை’ பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ”ஹிகுமா” எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன.

அதேபோல் ”சுகினோவாகுமா” எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றன. 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். அத்துடன் கரடிகள் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது

Read More : செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு..!! எதற்காக தெரியுமா..?

Chella

Next Post

மினி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய, 1,500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்..! பறக்கும் படையினர் அதிரடி..!

Thu Apr 18 , 2024
சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியே வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மினி வேனில் மது பாட்டிகள் இருந்ததையடுத்து அந்த வேனை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து மினி வேனை ஓட்டிவந்த ஓட்டுனர் ஏழுமலையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கோவிலஞ்சேரி பகுதியில் உள்ள ஒருவரிடம் சில பொருட்களை கொண்டு […]

You May Like