நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் பலர் தினமும் நடக்கிறார்கள். ஆனால், பின்னோக்கி நடப்பது சாதாரண நடைபயிற்சியைவிட அதிக நன்மைகளை தருகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முதுகு வலியிலிருந்து நிவாரணம்: பலர் தினம் மணிக்கணக்கில் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், முதுகுவலி என்பது சாதாரண பிரச்சனை. பின்னோக்கி நடக்கும்போது, முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது, இடுப்பு மற்றும் தோரணை தசைகள் வலுப்படும். இதனால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கிறது.
முழங்கால்களை வலுப்படுத்தும்: முழங்கால் வலி அல்லது காயம் உள்ளவர்கள், பின்னோக்கி நடப்பு பயிற்சியைச் செய்தால் முழங்காலில் ஏற்படும் அழுத்தம் குறையும், தசைகள் வலுப்பட்டு முழங்கால்கள் பலமாகும்.
சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது: பின்னோக்கி நடக்கும் போது, நமது மூளை சாதாரண நடைப்பயிற்சியிலிருந்து வித்தியாசமாக செயல்படுகிறது. இது நமது உடலை அதிக கவனத்துடன் இயக்கச் செய்கிறது, சுற்றுப்புறத்தை நெருக்கமாக உணரச் செய்கிறது. இதனால் உள் காது மற்றும் மூளை ஒருங்கிணைப்பு மேம்படும்.
எடை குறைக்கும்: பின்னோக்கி நடப்பது முன்னோக்கி நடப்பதைவிட சுமார் 30-40% அதிக கலோரி எரிப்பை உண்டாக்கும். தினமும் 10 நிமிடங்கள் மட்டுமே பின்னோக்கி நடக்கினால், சாதாரண நடைப்பயிற்சியைவிட அதிக கலோரிகள் எரியும்.
நினைவாற்றல் மேம்படும்: பின்னோக்கி நடப்பு ஒரு மனப் பயிற்சியாகவும் அமைகிறது. ஒவ்வொரு அடியிலும் கவனம் செலுத்த வேண்டியதால், சுற்றுப்புற ஒலிகளை கவனிக்கவும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் உதவும். இதனால் செறிவு, நினைவாற்றல் மற்றும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
மூட்டு ஆரோக்கியம்: முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டுகளில் அழுத்தத்தை குறைத்து, தசைகளை வலுப்படுத்துவதால், மூட்டு ஆரோக்கியம் மேம்படும்.
Read more: உங்கள் ஃபோன் ரொம்ப ஸ்லோவா வேலை செய்யுதா..? யூஸ் பண்ணவே பிடிக்கலையா..? அப்படினா உடனே இதை பண்ணுங்க..!!



