முதல் பேட்டிங்கில் அசத்தல் சாதனை!… பெங்களூரு அணியை பின்னுக்கு தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் அதிக ரன்களில் பெங்களூரு அணியின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடித்துள்ளது.


ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை செய்ய முடிவு செய்து, அதன்படி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களை குவித்தது. இதில், சென்னை அணியில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 79, கான்வே 87 ரன்கள் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. மே 2-ஆம் தேதி ஹைதராபாத்-க்கு எதிராக ராஜஸ்தான் அணி 220 ரன்களை எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் போது அதிகமுறை 200 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது சென்னை அணி. இதற்கு முன் பெங்களூரு சாதனை படைத்திருந்த நிலையில், அதனை முறியடித்தது சென்னை அணி. அதன்படி, சென்னை அணி 22, பெங்களூரு அணி 21 என ஐபிஎல் தொடரில் முதல் பேட்டிங்கின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

ஃபேஸ்புக், ட்விட்டரை போல்!... இன்ஸ்டாகிராமில் அடுத்த மாதம் புதிய செயலி அறிமுகம்!... என்னென்ன சிறப்பம்சங்கள்!

Sun May 21 , 2023
பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையமாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சமூக வலைதளங்களுக்கான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி கொண்டே இருக்கின்றன. இதனால் பயனர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றன.அதிலும், குறிப்பாக ட்விட்டர் […]
Insta 1

You May Like