வேண்டாம் என தவிர்க்கும் வாடாமல்லியில் உள்ள அற்புத குணங்கள்..!!

காய்ந்து சருகுபோலாகிவிடும் வாடாமல்லி மலரை பெரும்பாலும் நாம் வேண்டாம் என ஒதுக்கிவிடுவோம். அந்த மலரில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரிந்தால் நீங்கள் விட மாட்டீர்கள்.. !!

வாடாமல்லியில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள் இதோ… குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம்.

வாடாமல்லி விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் (தயிர் இல்லாத நேரத்தில் பாலை கூட பயன்படுத்தலாம்) எடுத்து, அதை நன்றாக குழைத்து, உடலில் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கலாம்.

இது தலைமுடிக்கு நல்ல மருந்தாகிறது.,இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது,முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கவும் உதவுகிறது.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் வாடாமல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, இரண்டு சிட்டிகை மிளகுப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ள வேண்டும். பின் இதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்து மிதமான சூட்டில் பருகுவதன் மூலம் ஆஸ்துமா தொல்லையிலிருந்து விடுபடலாம்.

ஆன்டி பாக்டீரியல் தன்மை:வாடாமல்லி பூக்களுக்கு அற்புதமான ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. வாடாமல்லி செடியில் இருந்து எடுக்கப்படும் மெத்தனால் பேசிலஸ் சிரியஸ், ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் உள்பட 5 கிராம் பாக்டீரியாவில் இருந்து நம்மை காக்கும். இது மட்டும் இல்லாமல் எஸ்சீரிசியா கோலை, சால்மோனெல்லா டைபீ போன்ற 8 கிராம் நெகடிவ் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் தன்மை இதற்கு உண்டு.

ஆன்டி ஃபங்கல் தன்மை: வாடாமல்லி செடியில் இருந்து கிடைக்கும் மெத்தனாலுக்கு ஆன்டி ஃபங்கல் தன்மையும் உள்ளது. கேன்டிடா ஆல்பிகன்ஸ், ஆஸ்பெரிஜில்லஸ் நைஜர் மற்றும் சாக்கரோமைசஸ் செரிவிசியே போன்ற ஃபங்கஸ்களை எதிர்த்து போராடுகின்றது.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள்: முழு வாடாமல்லி செடியில் இருந்து கிடைக்கும் மெத்தனாலில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாடாமல்லி டீயை பல இடங்களில் பருகி வருகின்றனர்.

சுத்திகரிப்பு தன்மை: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்வதில் வாடாமல்லி சிறந்தது. இதை தவிர கால் பிளாடரில் உள்ள கற்கள், மூக்கில் இரத்தம் வடிதல், இருமல் ஆகியவற்றிற்கு இது ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.

சிறுநீரக

உயர் இரத்த அழுத்தம்:உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க இது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

வாடாமல்லி செடி மற்றும் பூக்களை கொண்டு செய்யப்படும் வீட்டு வைத்தியம்: வாடாமல்லி பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்த பின் வடிகட்டி தேன் கலந்து குடித்து வர உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் கிடைக்கும். இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த மருந்து.

வாடாமல்லி செடியின் ஆன்டி பாக்டீரியல் தன்மை காரணமாக இதன் இலைகளை மைய அரைத்து பத்து போல காயங்களின் மேல் பூசி வர காயங்கள் விரைவில் குணமாகும்

ரோஜா இதழ்களில் இருந்து எடுக்கப்படும் ரோஸ் வாட்டரை போலவே வாடாமல்லி பூக்களில் இருந்து எடுக்கப்படும் நீரை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தி வரலாம். இந்த பூக்களை காய வைத்து பொடி செய்து பேஸ் பேக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது பல விதமான சரும நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

Next Post

வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Mon Oct 24 , 2022
வெற்றிலை என்பது விசேஷங்களில் இடம்பெறும் முக்கியமான ஒரு பொருள். அதே போல இது நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதைப் பற்றி பார்க்கலாம்.. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை […]

You May Like