“அமெரிக்கா ஏதாவது செய்யணும்.. இல்லன்னா ரஷ்யா, சீனா சும்மா விடமாட்டாங்க..” கிரீன்லாந்து குறித்து டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை..!

20250214034154 Trump Don

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா ஏதாவது செய்யும்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இந்தக் கருத்தை அவர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை தலைமை நிர்வாகிகளுடன் நடந்த ஊடக சந்திப்பின் போது கூறினார்.


கிரீன்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப் “ நாம் கிரீன்லாந்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், ரஷ்யா அல்லது சீனா அதை கைப்பற்றிவிடும். அப்போது ரஷ்யாவோ சீனாவோ நம் அண்டை நாடாக இருப்பதை நாம் ஏற்கமாட்டோம். நான் எளிதான வழியில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன்.
ஆனால் எளிதாக முடியாவிட்டால், கடினமான வழியிலேயே செய்வோம்.” என்று கூறினார்..

டென்மார்க்கை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருப்பது பேசிய டிரம்ப் “500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கப்பல் அங்கே கரை ஏறியதால் அந்த நிலம் அவர்களுடையது ஆகிவிடாது. நாங்களும் பல கப்பல்களை அங்கே அனுப்பியுள்ளோம்.
நான் டென்மார்க்கின் ரசிகன் தான். அவர்கள் எனக்கு நல்லவர்களாக இருந்துள்ளனர்.
ஆனால் இதனால் அவர்களுக்கு அந்த நிலத்தின் உரிமை கிடையாது.” என்று கூறினார்.

கிரீன்லாந்தின் சுற்றுப்புற கடல் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் பேசினார்.. ரஷ்ய போர் கப்பல்கள், சீன போர் கப்பல்கள், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள்
எங்கும் சுற்றி வருகின்றன. நாம் எதுவும் செய்யவில்லை என்றால், அவர்கள் கிரீன்லாந்தை கைப்பற்றிவிடுவார்கள். அதனால், நாங்கள் நல்ல வழியிலாவது அல்லது கடினமான வழியிலாவது கிரீன்லாந்தில் நடவடிக்கை எடுப்போம்.” என்று தெரிவித்தார்..

“ஏன் கிரீன்லாந்தை ‘சொந்தமாக’ வைத்திருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் “ நாம் சொந்தமாக வைத்திருந்தால் தான் பாதுகாப்போம்.
லீஸ் (ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்துவது) வைத்தால் அதேபோல் பாதுகாக்க மாட்டோம். நாடுகள் உரிமையோடு வைத்திருக்க வேண்டும். உரிமையைத் தான் பாதுகாப்பார்கள், லீஸை அல்ல. நாம் செய்யாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா செய்வார்கள் – அது நடக்காது.” என்று கூறினார்..

நேட்டோ பற்றி கூறிய டிரம்ப் “நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும். நான் நேட்டோவுக்கு முழு ஆதரவு. அதை நான் தான் காப்பாற்றினேன். நான் இல்லையென்றால் நேட்டோ இப்போது இருக்காது.” என்று தெரிவித்தார்..

இதனிடையே, ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். பணவீக்கம் காரணமாக ஈரானில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை குறைந்தது 62 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய டிரம்ப் “ ஈரான் பெரிய சிக்கலில் உள்ளது. யாரும் எதிர்பாராத சில நகரங்களை மக்கள் கைப்பற்றியுள்ளனர். நிலைமையை நாங்கள் கவனமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீண்டும் மக்களை கொல்லத் தொடங்கினால், நாங்கள் தலையிடுவோம். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் அமெரிக்கா கடினமாக நடந்துகொள்ளவில்லை.. ஈரான் மக்கள் மீது அரசு மோசமாக நடந்துகொண்டதற்கான விளைவுகளை இப்போது அவர்கள் அனுபவித்து வருகின்றனர்..” என்று கூறினார்..

Read More : வெனிசுலாவில் தங்கம் விலை இவ்வளவு குறைவா? எவ்வளவுன்னு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவீங்க..!

RUPA

Next Post

உங்கள் வயிறு சுத்தமாகணுமா? வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த பானத்தை ட்ரை பண்ணி பாருங்க!

Sat Jan 10 , 2026
சமீபகாலமாக, செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் வயிறு சுத்தமாகவில்லை என்றால், அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், செரிமானப் பிரச்சனைகள் தொடர்ந்தால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, எல்லா நோய்களுக்கும் மூல காரணம் நமது பலவீனமான செரிமான மண்டலம்தான். உணவு சரியாக செரிமானம் ஆகாததால், வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் கனம் ஏற்படுகின்றன. சில இயற்கை மூலப்பொருட்கள் செரிமான மண்டலத்திற்குத் தீர்வாக அமைகின்றன.செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் […]
digestion

You May Like