தங்கமே நம்முடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றும் என்ற நடுத்தர மக்களிடம் உள்ளது. இன்று ஏறியிருக்கும் தங்கம் விலையையும் நம்முடைய மக்கள் ஏற்க பழகி கொண்டால், இனி தங்கம் விலை குறைய வாய்ப்புகள் குறைவுதான் என்று கருத்து கூறுகிறார் டாக்டர் காந்தராஜ்.
BBT Cinema யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தியாவில் மக்கள் தங்கத்தையே பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள். தங்கம் இல்லாமல் வாழ்வாதாரம் குலைந்துவிடும் என்ற மனநிலை வலுப்பெற்றுள்ளது. இன்று ஏறியிருக்கும் தங்க விலையையும் மக்கள் ஏற்க பழகிவிட்டால், இனி தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று எச்சரித்தார்.
தன் அனுபவத்தை பகிர்ந்த அவர், “ஜாம்பியா சென்றபோது, அங்கெல்லாம் சீன கார்கள் தான் ஓடியது. நம்முடைய மாருதி கார்களை காணவே இல்லை. இந்திய பொருட்கள் தரத்தில் மேலானவை என்றாலும், சீனா மார்க்கெட்டிங்கில் டாப்பில் உள்ளது. அவர்களின் பொருட்கள் சில மாதங்களில் பழுதாகும். ஆனால் அதுவே புதிய வாங்குதலுக்கான சந்தையை உருவாக்குகிறது” என்றார்.
வரலாற்று காலத்திலிருந்தே தங்கம் இந்தியர்களின் மனதில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. கோயில்கள், அரசர்களின் கல்லறைகள், பிரமிடுகள் என எங்கும் தங்கமே முக்கிய பங்கு வகித்துள்ளது. திருப்பதி, சிதம்பரம் போன்ற கோயில்களுக்கான உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோல் விலை உயர்ந்தால் தங்க விலையும் உயரும் நிலையில், இதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அமெரிக்கா தான். ஏற்றுமதி, உற்பத்தி என அனைத்திற்கும் அமெரிக்க மார்க்கெட்டையே நம்ப வேண்டியிருப்பதால், தங்க விலையை உலக வல்லரசுகள் தங்கள் சூழ்ச்சிக்காகப் பயன்படுத்துகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார்.



