ஜனநாயகன் சிக்கலுக்கு மத்தியில் தவெக தேர்தல் அறிக்கை குழுவை அறிவித்தார் விஜய்..! சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

vijay 2

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது..


அந்த வகையில் அக்கட்சி தலைவர் விஜய் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள். பல்வேறு ஊழியர் சங்கங்கள். விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழு விவரம்:

1. Dr. K.G. அருண்ராஜ் MBBS., Ex. IRS.

2. திரு. J.C.D. பிரபாகர் BA. BL., Ex. MLA.

3. திரு. A. ராஜ்மோகன் BTech. IT.

4. திருமதி. T.S.K.மயூரி MA.

5.பேராசிரியர். திரு. A. சம்பத்குமார் MBA.. M.Phil., Ph.D.

6. திரு. M.அருள் பிரகாசம் M.Com.

7. திரு. விஜய் R. பரணிபாலாஜி BA.LLB.

8. திரு. முகமது பர்வேஸ் B.A., LLB (HONS)

9. Dr. TK. பிரபு BDS., MSD., MSC., ICDL., FICOL

10. திரு. K. கிறிஸ்டி பிருத்வி BE. MBA.

11. திருமதி. M.K. தேன்மொழி பிரசன்னா B.Tech IT.

12. வழக்கறிஞர் M. சத்யகுமார் LLM, ACA, ACMA, ACS, CIMA-ACMA(UK), CGMA(US). CISI-ACSI(UK), MA(Eco), PhD.

மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு. அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..

ஒருபுறம் இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.. இதுகுறித்து வாய் திறக்காத விஜய், தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது..

Read More : கரூர் துயரம்.. வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு..! 12-ம் தேதி டெல்லியில் ஆஜராகும் விஜய்..!

RUPA

Next Post

மொபைல் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்..! ஜூன் முதல் ரீசார்ஜ் கட்டணம் உயரப் போகிறது..! எவ்வளவு தெரியுமா?

Fri Jan 9 , 2026
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த கட்டண உயர்வு, 2026 ஜூன் மாதத்தில் அமலுக்கு வரலாம் என்றும், இதனால் 2027 நிதியாண்டில் (FY27) டெலிகாம் துறையின் வருமான வளர்ச்சி விகிதம் இரட்டிப்பாகும் என்றும் கூறப்படுகிறது. 2026 ஜூனில் கட்டண உயர்வு Jefferies என்ற நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் கடந்த […]
mobile recharge plan

You May Like