சென்னை தரமணியில் உள்ள CSIR – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
காலிப்பணியிடங்கள் – 30
இட ஒதுக்கீடு: பொது – 12, எஸ்சி – 4, எஸ்டி – 3, ஒபிசி – 8, EWS – 3 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி; கட்டமைப்பு பொறியியல், பயன்பாட்டு மெக்கானிக்ஸ், புவிடெக்னிக்கல், கடல் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேனிங் அல்லது மேற்கண்டவற்றிற்குச் நிகரான எந்தப் பொறியியல் துறையிலும் M.Tech / M.E முதுகலைப் பட்டப்படிப்பு பெற்றிருப்பது கட்டாயம்.
1 பணியிடத்திற்கு மட்டும் B.Tech / M.Sc டிகிரி + அறிவுசார் சொத்து சட்டத்தில் (Intellectual Property Law) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 11 கீழ் ரூ.67,700 முதல் 2,08,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் (Interview) முறையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கல்வித் தகுதி, தொழில் அனுபவம், மேற்கொண்ட ஆய்வு போன்ற அம்சங்களின் அடிப்படையில் முதலில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அதில் தகுதியானவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் காட்டும் திறன், துறைக்கான பார்வை, சாதனைகள் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் https://serc.res.in/csir-recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2025.



