டிகிரி போதும்.. மத்திய அரசின் சட்டம் தீர்ப்பாயத்தில் வேலை.. ரூ.50,000 சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க..

job

மத்திய அரசின் தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் (NCLT) காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தனிச் செயலாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணியிட விவரம்:

தனிச் செயலாளர் (Private Secretaries) – 14
சுருக்கெழுத்தாளர் (Stenographers) – 18

சென்னையில் தனிச் செயலாளர் பதவிக்கு 3 மற்றும் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

வயது வரம்பு:

  • தனிச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது இருக்க வேண்டும்.
  • சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 28 வயது இருக்க வேண்டும்.
  • மத்திய அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

* விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 100 வாரத்தைகள் என்ற விதம் Dictation மற்றும் கணினியில் ஒரு நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற விதம் Transcription திறன் அவசியமாகும்.

* விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் சுருக்கெழுத்தராக மற்றும் தனி செயலாளராக 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: சுருக்கெழுத்தாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45,000 மற்றும் தனிச் செயலாளர் பதவிக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைமுறை:

  • விண்ணப்பதாரர்கள் முதலில் திறன் தேர்வு (Skill Test) எழுத வேண்டும்.
  • இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.
  • தேர்வு மற்றும் நேர்காணல் குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களின் மொபைல் எண் & இமெயில் வழியாக அறிவிக்கப்படும்.
  • எனவே தொடர்பு எண்களை எப்போதும் செயலில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் 1 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
  • தேவையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://nclt.gov.in/ என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: அக்டோபர் 8-ம் தேதியே கடைசி நாள் ஆகும்.

Read more: பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் டபுள் மடங்கு பலன் உறுதி.. ட்ரை பண்ணி பாருங்க..!!

English Summary

An employment notification has been issued for vacant posts in the National Company Law Tribunal (NCLT) of the Central Government.

Next Post

சங்கடப்படாதீர்கள்!. உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?.

Mon Sep 22 , 2025
வியர்வை வெட்கப்பட வேண்டிய ஒன்றோ அல்லது துர்நாற்றம் வீச வேண்டிய ஒன்றோ அல்ல. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வியர்வை என்றாலே நம்மில் பலருக்கும் அலர்ஜி. உடல் கசகசப்பு, துர்நாற்றம் என இவை எல்லாம் வேர்வையால் ஏற்படக்கூடியது என்பதற்காக எவ்வளவு தூரம் வேர்க்காமல் இருக்க வேண்டுமோ அவ்வளவு வியர்வையை வெளியேற்றாமல் இருப்பார்கள். இவை நன்மையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. உடல் […]
underarm sweat

You May Like