மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுரங்களில் பணி செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 107 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியிட விவரம்:
மைனிங் மேட்-சி – 95
வெல்டிங் இன்ஜின் டிரைவர் – பி – 9
பாயிலர்-கம்-கம்பரஸ்சர் – 3
சம்பளம்:
- மைனிங் மேட் பதவிக்கு ரூ.29,190 முதல் ரூ.45,480 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இதர பதவிகளுக்கு ரூ.28,390 முதல் ரூ.44,230 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
- மைனிங் மேட் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது வரை இருக்கலாம். பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 53 வயது வரை தளர்வு அளிக்கப்படுகிறது.
- வெல்டிங் இன்ஜின் டிரைவர் பதவிக்கு 32 வயது வரை இருக்கலாம்.
- பாயிலர்-கம்-கம்பரஸ்சர் பதவிக்கு 30 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* மைனிங் மேட் பதவிக்கு “Mining Mate/ Foreman” ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* வெல்டிங் இன்ஜின் டிரைவர் பதவிக்கு 10-ம் வகுப்பு தகுதியுடன் இதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* பாயிலர்-கம்-கம்பரஸ்சர் பதவிக்கு 10-ம் வகுப்பு தகுதியுடன் அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 ஆண்டு அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை: யுரேனியம் கார்ப்பரேஷன் (UCIL) நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து, கீழ்க்கண்ட தேர்வுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை நடத்தப்படும்:
- எழுத்துத் தேர்வு
- திறன் தேர்வு (Skill Test)
- சைக்கோமெட்ரிக் தேர்வு (Psychometric Test)
- குழு கலந்துரையாடல் (Group Discussion)
- நேர்காணல் (Interview)
எந்த வகை தேர்வு நடைபெறும் என்பது, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையைப் பொறுத்து யுரேனியம் கார்ப்பரேஷன் நிர்வாகம் பின்னர் அறிவிக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது? மத்திய அரசு நிறுவனமான யுரேனியம் கார்ப்பரேஷன் (UCIL) பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், https://ucil.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025
Read more: Breaking : உருவானது சென்யார் புயல்..! தமிழகத்திற்கு பாதிப்பா? வானிலை மையம் முக்கிய தகவல்!



