Anand Srinivasan | பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு..!!

பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் சொல்லும் கருத்துக்கு மக்களிடையே தனி வரவேற்பு உண்டு. இவர் தங்கம் சேமிப்பது முதல் பணத்தை முதலீடு செய்வது என பல விஷயங்களை மக்களுக்கு சொல்லி வருகிறார். ஆனந்த் சீனிவாசன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) வணிகப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும், நிதித் துறைத் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் பொருளாதாரம் குறித்துப் பேசி வந்த ஆனந்த் சீனிவாசன்,சமீபத்தில் அரசியல் பக்கம் வந்தார். பாஜக அரசைக் கடுமையாகச் சாடி பேசிய ஆனந்த் சீனிவாசன் இந்தியா கூட்டணி நிச்சயம் லோக்சபா தேர்தலில் வெல்லும் எனக் கூறியுள்ளார். ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனந்த் சீனிவாசன் பங்கேற்று வந்தார். இந்நிலையில், ஆனந்த் சீனிவாசனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக தொடர்புதுறை தலைவராக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் நியமித்துள்ளார்.

Read More : அப்கிரேட் ஆகிறது 34 தமிழக ரயில் நிலையங்கள்..!! அடிக்கல் நாட்டினார் PM Modi..!!

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக புள்ளி விவரமாக கருத்துக்களை முன் வைத்து பேசுவார் ஆனந்த் சீனிவாசன். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Chella

Next Post

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் MLA சரஸ்வதி..? அனல் பறக்கும் அரசியல் களம்..!!

Mon Feb 26 , 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

You May Like