சிவகார்த்திகேயனின் ‘பரசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடைசி நிமிடம் வரை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் சிக்கலில் இருந்தது.. படம் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்புதான் 25 மாற்றங்களுடன் ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்றது.
‘பரசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது, ஆனால் இந்தப் படம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் லாபகரமானதாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் குறித்து பரப்பப்படும் எதிர்மறைப் பிரச்சாரங்களுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பதிலளித்துள்ளார். அவர் நடிகர் விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். போலி ஐடிகள் மூலம் சிலர் பிரச்சாரம் செய்வதாகவும், படம் வெளியிட முடியாத ஒரு நடிகரின் ரசிகர்கள் தான் இதையெல்லாம் செய்வதாகவும், இது போன்ற ரவுடிகளின் அராஜகத்தைத்தான் தாங்கள் எதிர்கொள்வதாகவும் சுதா கொங்கரா கூறியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் சுதா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் “படம் அதன் இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. உங்கள் படம் தானாகவே பேசினால் மட்டும் போதாது. பொங்கல் பண்டிகைக்குள் இது இன்னும் பலரைச் சென்றடையும் என்று நம்புகிறேன். அவர்கள் போலி அடையாளங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு ஒரு மோசமான பிரச்சாரத்தைச் செய்கிறார்கள். இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இது ஒரு நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது. அவர்களின் திறமையின்மையால், அவர்களால் படத்தை வெளியிட முடியவில்லை. படம் வெளியாகாத நடிகரின் ரசிகர்களின் ரவுடித்தனம் மற்றும் அராஜகத்தை எதிர்த்து போராடுகிறோம்.,” என்று கூறினார்.
சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது..சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்..
‘பராசக்தி’ திரைப்படம் 1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகனாக அறியப்பட்ட ரவி மோகனுக்கு இது ஒரு புதிய பரிமாணமாக இருந்தது. ஸ்ரீலீலாவிற்கு இது முதல் தமிழ்த் திரைப்படம். ஆரம்பத்தில் சூர்யா மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் ‘புறநானூறு’ என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், இப்போது ‘பராசக்தி’ என்று மாறியுள்ளது. இதில் பேசில் ஜோசப்பும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
மறுபுறம், நடிகர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்தது.. இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட் கே. நாராயணா மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்கள். சென்சார் சான்று பிரச்சனைகள் காரணமாக இந்தப் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..



