Annamalai | விஜயதரணியின் வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்..!! குஷியில் அண்ணாமலை..!!

விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி, டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார். பிரதமர் மோடியின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால் அவரது தலைமையை ஏற்று பாஜகவை மேலும் வலுப்படுத்த கட்சியில் இணைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜயதரணி தெரிவித்தார்.

இந்நிலையில், விஜயதரணியின் வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரி விஜயதரணி, பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில இணை பொறுப்பாளர்சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். சகோதரி விஜயதரணியை வரவேற்பதோடு, அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்” என்று கூறியுள்ளார்.

Read More : Lok Sabha | தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்..? தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தகவல்..!!

Chella

Next Post

Brinjal | விஷமாகும் கத்தரிக்காய்.! இந்த நோய் இருப்பவர்கள் மறந்தும் கூட சாப்பிடாதீங்க.!

Sat Feb 24 , 2024
Brinjal | பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகளில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். குறிப்பாக கத்திரிக்காயில் நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சில நோயுள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு விஷமாக மாறிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதைக் குறித்து […]
brinjal

You May Like