குரூப் “பி” மற்றும் “சி” பட்டதாரி அளவிலான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ

college 2025 1

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, 2025’க்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் 09.06.2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் குரூப் “பி” மற்றும் குரூப் “சி” பதவிகளை நிரப்புவதற்கான திறந்தநிலை போட்டித் தேர்வை ஆணையம் நடத்தும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள்.


பதவி விவரங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள், பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் ‘mySSC’ என்ற செயலி மூலம் இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 04.07.2025 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 05.07.2025 ஆகும். ஆந்திராவில் 13 மையங்கள், புதுச்சேரியில் 01 மையம், தமிழ்நாட்டில் 8 மையங்கள், தெலங்கானாவில் 3 மையங்கள் உட்பட, தென் பிராந்தியத்தில் 25 மையங்கள்/நகரங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: “ஓசி” பேருந்து என்ற திமுக எம்.எல்.ஏ… நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

Vignesh

Next Post

TNPL: ஷாரூக் கான் அரைசதம் வீண்…! முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை அணி..!

Thu Jun 12 , 2025
கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்த 9வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மதுரை அணி. டி.என்.பி.எல். (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 8வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்றைய தினம் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை […]
tnpl madurai vs kovai

You May Like