நயன்தாராவுக்கு அடுத்த தலைவலி.. ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு..

FotoJet 23 1

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ஆவணப்படம், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.. இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. அதில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தது.. இந்த வழக்கின் விசாரணை தற்ப்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது..


இந்த நிலையில் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்திரமுகி காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.. அனுமதியின்றி சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது..

இதுகுறித்து ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதில் தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையையும் தள்ளி வைத்துள்ளது. ஏற்கனவே தனுஷ் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கு உள்ள நிலையில் மேலும் ஒரு நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் நயன்தாராவுக்கு சிக்கல் அதிகமாகி உள்ளது.

Read More : ஒரு கையில் கோடாரி.. இன்னொரு கையில் கேடயத்துடன் மிரட்டும் ரிஷப் ஷெட்டி.. காந்தாரா சேப்டர் 1 படத்தின் புதிய போஸ்டர் இதோ..

RUPA

Next Post

“அஜித் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை... ஆனா இவ்வளவு டார்ச்சர் என்பது..” நிதிதா புதிய பேட்டி..

Mon Jul 7 , 2025
அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது.. […]
ajithnikitha2 1751509769

You May Like