கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால் மாநிலம் முழுவதும் அச்ச நிலை நிலவுகிறது.
மலப்புரம் மாவட்டம் வாண்டூரைச் சேர்ந்த ஷோபனா (வயது 30), கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது, அவரது உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கடந்த வாரமே, கோழிக்கோட்டில் உள்ள ஓமசேரியைச் சேர்ந்த மூன்று மாத ஆண் குழந்தை, மலப்புரத்தைச் சேர்ந்த 52 வயது ரம்லா மற்றும் தாமரசேரியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஆகியோர் இந்த நோயால் பலியானனர். இதனுடன், கடந்த ஒரு மாதத்தில் இந்த உயிர்க்கொல்லி நோயால் மாநிலத்தில் மொத்தம் ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தற்போது, கோழிக்கோடு MCH மருத்துவமனையில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்’ எனப்படும் இந்த நோய், தேங்கி நிற்கும் நீர், மண், கழிவுநீர் குட்டைகள், நன்னீர் ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாக மனிதர்களுக்கு பரவுகிறது. பொதுவாக, மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் போது அமீபா மூளை செல்களை தாக்குகிறது.
இதற்கு இரண்டு முக்கிய வடிவங்கள் உள்ளன:
* Primary Amoebic Meningoencephalitis (PAM): நேக்லீரியா ஃபோலேரி (Naegleria fowleri) எனப்படும் அமீபாவால் ஏற்படும். இது மூளை செல்களை அழித்து, கடுமையான வீக்கம் மற்றும் திசு சேதத்தை உண்டாக்கும்.
* Granulomatous Amoebic Encephalitis (GAE): வேறு வகை அமீபாக்கள் காரணமாக ஏற்படுகிறது.
Read more: ரயிலை OYO ரூமாக மாற்றிய ஜோடி..! அனைவரின் முன்னிலையிலும் அருவருப்பான செயல்.. வைரல் வீடியோ!