வரும் 6-ம் தேதி முதல் விருப்ப மனு.. தவெக தலைமை அறிவிப்பு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

TVK 2025

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது..

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது..


இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்களுக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்க உள்ளதாக தவெக தலைமை தெரிவித்துள்ளது.. தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும். இதைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : தவெக புதிய எதிரியா? விஜய் குறித்து ஒரே வார்த்தையில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன ‘நச்’ பதில்..!

RUPA

Next Post

“போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால்.. மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும்..” அண்ணாமலை விமர்சனம்..!

Tue Feb 3 , 2026
போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்று அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த […]
67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

You May Like