ரூ.1,20,940 சம்பளம்.. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை.. செம சான்ஸ்..! எப்படி விண்ணப்பிப்பது..?

Bank Jobs Recruitment.jpg 1

பேங்க் ஆப் பரோடா வங்கியில் பெருநிறுவன மற்றும் நிறுவனக் கடன் (Corporate & Institutional Credit) பிரிவுகளில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியிட விவரம்:

மேனேஜர் – கிரெடிட் அனலிஸ்ட் – 1

சீனியர் மேனேஜர் – கிரெடிட் அனலிஸ்ட் – 25

சீப் மேனேஜர் – கிரெடிட் அனலிஸ்ட் – 2

சீனியர் மேனேஜர் (C & IC Relationship Manager) – 16

தலைமை மேனேஜர் (C & IC) – 6

மொத்தம் – 50

பிரிவு வாரியான ஒதுக்கீடு:

  • பொதுப்பிரிவு – 22
  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) – 23
  • ஒபிசி – 4
  • எஸ்சி – 1

வயது வரம்பு:

மேனேஜர்: 25 முதல் 30 வயது வரை

சீனியர் மேனேஜர்: 28 முதல் 35 வயது வரை

சீப் மேனேஜர்: 32 முதல் 42 வயது வரை

வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவு விண்ணப்பதார்கள் – 3, மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவு – 10, ஒபிசி – 13 மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 15 வருடங்கள் வரை கூடுதல் தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

* ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

* மேலும் நிதி (Finance) அல்லது நிதி சார்ந்த பாடப்பிரிவில் முதுகலை பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* அல்லது CA / CMA / CS / CFA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தகுதியை பெற்றிருக்கலாம்.

அனுபவம்:

  • மேனேஜர் பதவிக்கு – குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்
  • சீனியர் மேனேஜர் – 6 ஆண்டுகள் அனுபவம்
  • சீப் மேனேஜர் – 8 ஆண்டுகள் அனுபவம்

சம்பள விவரம்

* மேனேஜர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.

* சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.

* சீப் மேனேஜராக தேர்வாகும் நபர்களுக்கு ரூ.1,02,300 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல் / நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு முறை குறித்து இறுதி முடிவு வங்கி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

ஆன்லைன் தேர்வு விவரம்:

  • மொத்தம் 150 கேள்விகள், 225 மதிப்பெண்கள்
  • நேரம்: 150 நிமிடங்கள்

வினாத்தாளில் இடம்பெறும் பிரிவுகள்:

  • ஆங்கிலம்
  • காரணி (Reasoning)
  • நுண்ணறிவு (Aptitude)
  • பணிக்கான திறன் (Professional Knowledge)

தேர்வு மையம்: சென்னை

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.10.2025.

Read more: நீங்களும் ஆவின் பாலகம் திறக்கலாம்..!! எப்படி தெரியுமா..? விண்ணப்பிப்பது எப்படி..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Applications are invited from eligible candidates to work in the Corporate & Institutional Credit divisions at Bank of Baroda.

Next Post

Breaking : கரூர் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றம்.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

Mon Oct 13 , 2025
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
tvk supreme court

You May Like