மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையம் இமாராத் (RCI), அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
காலிப்பணியிட விவரம்:
பட்டதாரி அப்ரென்டிஸ் (Graduate Apprentice): 40 காலியிடங்கள்
டிப்ளமோ அப்ரென்டிஸ் (Diploma Apprentice): 20 காலியிடங்கள்
ஐ.டி.ஐ. அப்ரென்டிஸ் (ITI Apprentice): 135 காலியிடங்கள்
கல்வித் தகுதிகள்:
பட்டதாரி அப்ரென்டிஸ்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஈ.சி.இ (ECE), ஈ.இ.இ (EEE), சி.எஸ்.இ (CSE), மெக்கானிக்கல் (Mechanical) அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering) ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளமோ அப்ரென்டிஸ்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல், சி.எஸ்.இ, ஈ.இ.இ அல்லது ஈ.சி.இ இன்ஜினியரிங்கில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி.ஐ. அப்ரென்டிஸ்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஃபிட்டர் (Fitter), வெல்டர் (Welder), டர்னர் (Turner), மெஷினிஸ்ட் (Machinist), மெக்கானிக்-டீசல் (Mechanic-Diesel), டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) (Draughtsman), எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic), எலக்ட்ரீசியன் (Electrician), கோபா (COPA) அல்லது லைப்ரரி அசிஸ்டென்ட் (Library Assistant) ஆகியவற்றில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: DRDO RCI-யின் ஆட்சேர்ப்பு விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு (Shortlisting of Application) செய்யப்படும்.
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.drdo.gov.in/drdo/careers என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.09.2025.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2025.
Read more: ஓய்வு பெறுவதற்கு முன்பே PF ஓய்வூதியம் பெற முடியுமா? இது தான் ரூல்ஸ்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!