கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்..
இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலில் பேசிய அவர் “ இப்ப வந்து கேப்டனின் தம்பி என்று சொல்லும் விஜய், விஜய்காந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரை பார்த்தாரா? எத்தனையோ நடிகர்கள் வந்து அவரை பார்த்தனர்.. ரஜினி, சத்யராஜ், சரத்குமார் என எத்தனையோ நடிகர்கள் கேப்டனை பார்க்க வந்தார்கள், இப்போது மட்டும் விஜய்க்கு ஏன் இந்த பாசம் கொந்தளிக்கிறது என்பது தெரியவில்லை..
ஏன் உங்கள் முதல் மாநாட்டில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் போட்டோக்களை வைக்கவில்லை..? அடுத்த மாநாட்டில் இன்னும் வேறு யாருடைய போட்டவை வைப்பார்கள்.. கொள்கை தலைவர்கள் என்று 5 பேரை அறிவித்த நீங்கள்? ஏன் மற்ற தலைவர்களை பயன்படுத்த வேண்டும்.. எனவே உளவியல் ரீதியாக அதிமுகவின் வாக்கு வங்கியை சேகரிக்கலாம், கபளீகரம் செய்யலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பது எங்களுக்கு தோன்றுகிறது..
முதல் மாநாட்டில் அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை.. அன்று அதிமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்திருப்பீர்கள்.. ஆனால் இன்று பாஜக உள்ளே வந்துவிட்டது, அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது என்று இன்று அதிமுக திட்டுகிறீர்கள்..
இன்றைக்கு வந்து எம்.ஜி.ஆர் குணம் கொண்ட கேப்டன் விஜய்காந்த் என் அண்ணன், எம்.ஜி.ஆரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.. ஆனால் கேப்டனோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று சொல்லும் விஜய் ஏன் முதல் மாநாட்டில் சொல்லவில்லை? மதுரை என்பதால் இன்று சொல்கிறீர்கள்..
உடல்நிலை சரியில்லாமல் போது அவர் சென்று பார்க்கவில்லை? கேப்டனும் நீங்களும் ஒன்னா? சிம்புவே சொல்லிருக்காரு.. கேப்டனும் நீங்களும் ஒன்னான்னு சிம்பு கேட்கிறார்.. அதனால் கேப்டன் மீது திடீர் பாசம் ஏன் என்றால் அது ஓட்டு அரசியல் தான்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று விஜய் கூறியதையும் விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ ஒரு முதலமைச்சரை அங்கிள் என்று விமர்சிப்பது மூன்றாம் தர அரசியல்வாதி பேசுவது போல் உள்ளது. 2-ம், 3-ம் கட்ட தலைவர்கள் இப்படி விமர்சிக்கலாம்.. ஆனால் வருங்கால முதல்வர் என்று சொல்லிக்கொள்ளும் விஜய் பக்குவமாக பேச வேண்டும்.. அரசியல் நீண்ட அனுபவம் கொண்ட தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சரை அங்கிள் என்று கூறுவது மூன்றாம் தர பேச்சாக நான் பார்க்கிறேன்.. இது சினிமா டயலாக் மாதிரி தான் இருக்கிறது.. இப்படி கிண்டல் செய்வது தவறாக உள்ளது..” என்று தெரிவித்தார்..