மழைக்காலத்தில் கொசுக்கள் தொல்லையா?. ஒரேயொரு மரத்துண்டு போதும்!. ட்ரை பண்ணி பாருங்க..!

mosquitoes 11zon

நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்து இடங்களிலும் மழைக் காலத்தில் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். இவை சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்புகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.


கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவை சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் போன்றோர் இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில், இயற்கையான முறையில் கொசுக்களை எப்படி கட்டுப்படுத்துவது எனப் பார்க்கலாம்.

வீட்டில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் தொல்லை அதிகம் இருந்தால் இனி கவலைப்பட வேண்டாம். இந்த ஒரு மரத்துண்டை வீட்டில் வைத்திருந்தால் போதும். பூச்சிகள் மற்றும் கொசுக்கள் தொல்லை இருக்காது. அதுதான் கற்பூர மரம். இந்த மரத்தின் ஒரு துண்டை வீட்டில் வைத்தால் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் தானாக ஓடிவிடும். பல்வேறு வகையான மரச்சாமான்கள் கற்பூர மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது மிகவும் வலுவான மற்றும் நீடித்த தன்மை கொண்டது. இதுதவிர, கற்பூர மரத்திலிருந்து மூல கற்பூரமும் தயாரிக்கப்படுகிறது.

கற்பூர மரமும் அழகுக்கான மரமாக கருதப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதன் அழகிய பூக்கள், பழங்கள் மற்றும் இலைகள் மனிதர்களை ஈர்க்கின்றன. பொதுவாக வீட்டின் அறைகள் மற்றும் அலமாரிகளில் கற்பூரம் வைக்கப்படும். கற்பூர மரத்தை அருகில் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலைப் பரப்புவதாகவும் நம்பப்படுகிறது. இதை படுக்கையின் தலையணைப் பகுதியிலும் வைக்கலாம். இது எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. மேலும், நல்ல தூக்கத்திற்கும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

கற்பூர மரத்தின் நறுமணம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்குமாம். இந்த நறுமணம் நரம்புகளைத் தூண்டி, வலி, அரிப்பு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கற்பூர மரம் கொசுக்களை விரட்டவும் உதவுகிறது. இதன் இலைகள் இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் வீடுகளில் கற்பூர மரத்தை வைக்கலாம். முன்பெல்லாம் சமவெளிப் பகுதிகளில் கற்பூர மரங்கள் அதிகம் காணப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக மலைவாழ் மக்களும் கற்பூர மரத்தை வளர்க்கத் தொடங்கி உள்ளனர்.

Readmore: தேங்காய் எண்ணெயில் சமைப்பது நல்லதா..? இதய நோயாளிகளுக்கு எந்த எண்ணெய் சிறந்தது..?

KOKILA

Next Post

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி...! இனி 15 நாட்களுக்கு ஒருமுறை முகாம்...! தமிழக அரசு தொடங்கிய புதிய திட்டம்...!

Fri May 30 , 2025
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை […]
Mk Stalin Farmers 2025

You May Like